உலகில் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் தகவல் பரிமாற்ற தளம் தான் யூட்யூப். இதற்கு அதிக பயனர்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் பணம் செலுத்தாமல் இதில் உள்ள வீடியோக்களை பார்க்க முடியும். இருந்தாலும் youtube இல் அடிக்கடி வரும் விளம்பரங்கள் பயனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும்.இந்த விளம்பரங்களின் இடையூறு இல்லாமல் வீடியோவை பார்ப்பதற்கு youtube பிரீமியம் என்ற தனி வசதி உள்ளது. யூடியூப் ப்ரீமியம் என்பது சந்த அடிப்படையில் ஆன சேவை.
இந்த சேவையின் மூலமாக விளம்பரம் இல்லாமல் வீடியோக்களை பார்ப்பது, வீடியோக்களை ஆஃப்லைனில் பார்ப்பது, யூடியூப் மியூசிக் சந்தா மற்றும் youtube கிட்ஸ் ஆப்ஸ் போன்ற பல வசதிகள் உள்ளன. இந்நிலையில் யூடியூப் பிரிமியத்தில் விளம்பரம் இல்லாமல் வீடியோவை பார்க்கும் வசதி குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பயனர்கள் 10 ரூபாய்க்கு பிரீமியம் சலுகையை பெற முடியும். சந்தா செலுத்தினால் மூன்று மாதங்களுக்கு youtube பிரீமியம் மெம்பர்ஷிப்பை பெற முடியும். மூன்று மாதங்களுக்கு பின்னர் பயனர்கள் மாதத்திற்கு 129 ரூபாய் செலுத்த வேண்டும்.இந்த சலுகை குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.