“பிக் பாஸ் 6” சீசன் போட்டியாளரான ஆயிஷாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
ஜீ தமிழில் “சத்யா” சின்னத்திரை மூலமாக பிரபலாமான நடிகை ஆயிஷா. தற்போது “பிக் பாஸ் சீசன் 6” -ல் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கின்றார். நேற்று முன்தினம் அவர் அசல் கோலார் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் கண்ணீர் விட்டுள்ளார். அதன் பின்னர் நேற்று ஜனனி அவருடன் சண்டை வரும் என சொன்னதால் அவர் இன்னும் கலக்கத்தில் இருந்தார்.
இந்நிலையில் இன்று ஆயிஷாவுக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியான மற்ற போட்டியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்து இருக்கின்றார்கள். இருப்பினும் அவருக்கு தொடர்ந்து மூச்சு திணறல் இருந்ததால் பிக் பாஸ் அழைத்து மருத்துவ குழுவினர் மூலம் சிகிச்சை பெற்றுள்ளார். அதற்கு பிறகு அவர் உடல்நிலை தேறியுள்ளதாக தெரிகின்றது.