திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிகளுக்குறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மத்திய மாவட்ட பொறுப்பாளர், அதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு அவர்கள் உரையாற்றினார். அவர் பேசும் போது, பாஜகவுக்கு எந்த கட்சியில் இருந்து வந்தாலும் மாநில அளவிலான பதவி கொடுத்து அவர்களை அழகு பார்க்கிறார்கள். அதேபோல பிஜேபி இரண்டாவது இடத்துக்கு வரக்கூடாது. அதற்கான வேலையை நாம் பார்க்க வேண்டும். பாஜகவினர் எந்தெந்த பணிகளை செய்கிறார்களோ, அதற்கு அதிகமான பணிகளை நாம் செய்ய வேண்டும் என்று தொண்டர்களிடம் உரையாற்றினார்.
இந்த அது மட்டுமல்லாமல் அதிமுக வந்து அண்ணன் தம்பி கட்சி இதுவரை சந்தித்த தேர்தல் இல்லை இந்த முறைக்கும் தேர்தல்கள் சகல அதிகாரங்களையும் எதிர்த்து நின்று போட்டியிடும் தேர்தல் என்றும் பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற அனைத்து உறுப்பினர்களும் தொண்டர்களும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்ற ஒரு தெரிவித்திருந்தார். அதிமுக – திமுகவுக்கும் போட்டி என்பது அண்ணன் – தம்பிக்குள்ள இருக்கும் போட்டி. ஆனால் இனி வரக்கூடிய தேர்தலில் சகல அதிகாரத்தையும் வைத்திருக்க கைகளோடு வைத்திருப்பவோடு போட்டி போட வேண்டியுள்ளது என தெரிவித்தார்.