இந்தியாவில் போஸ்ட் ஆபீஸில் பொதுமக்களுக்காக பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. போஸ்ட் ஆபீஸ் இல் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் இரட்டிப்பு லாபத்தை பெற முடிகிறது. போஸ்ட் ஆபீஸ் இல் குறைந்தபட்ச தொகையிலிருந்து முதலீடு செய்து கொள்ளலாம் என்பதால் பல்வேறு தரப்பிலான பொது மக்களுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் இல் உள்ள கிராம் சுமங்கள் திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த திட்டத்தில் 19 முதல் 40 வயது உட்பட்டவர்கள் இணைந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கான பாலிசி காலம் 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் 25 வயதில் இணைந்து கொண்டால் உங்களுக்கு காப்பீட்டு தொகையாக 10 லட்ச ரூபாய் கிடைக்கும். அதன்பிறகு முதலீடு செய்யும் காலத்தை 15 ஆண்டுகளாக தேர்வு செய்து இருந்தால், மாதாந்திர பிரீமியம் தொகையாக 6793 ரூபாய் செலுத்த வேண்டும். இதேபோன்று பாலிசி காலம் 20 ஆண்டுகளாக இருப்பின் மாதந்தோறும் 5121 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் 15 வருடத்தில் போனஸ் தொகையாக 9 லட்ச ரூபாயும், 20 வருட முடிவில் போனஸ் மற்றும் முதலீடு தொகை சேர்த்து 19 லட்ச ரூபாயும் கிடைக்கும்.