அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர்.
அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் டிரம்ப். பின்னர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை தந்தார். இதனை தொடர்ந்து டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேசிய பிரதமர் மோடி, தனது அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வருகை தந்த அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இத்தனை தொடர்ந்து பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப், டெல்லியில் என்னை வரவேற்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததை கௌரவமாக கருதுகிறேன் கூறியுள்ளார். இந்திய பயணம் சிறப்பனதாக இருந்தது. இந்தியர்கள் அளித்த வரவேற்பு பெருமையாக இருக்கிறது. இந்தியாவை நாங்கள் பெரிதும் நேசிக்கின்றோம். அகமதாபாத் நிகழ்ச்சி தமக்கு அளிக்கப்பட்ட பெரும் கவுரவம் என்றும் டிரம்ப் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.