ஒரு சூப்பர் மார்க்கெட்டை இடித்துவிட்டு அந்த இடத்தில் குழி தோண்டிய போது ஏராளமான எலும்புக்கூடுகள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஹாவர்போர்ட்வெஸ்டில் ஒரு சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட் கடந்த 2013-ம் ஆண்டு முதல் மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டை தற்போது இடிப்பதற்கு முடிவு செய்துள்ளனர். அதன்படி சூப்பர் மார்க்கெட் இருக்கும் இடத்தை இடித்துவிட்டு குழி தோண்டி உள்ளனர். அப்போது தோண்ட தோண்ட ஏராளமான எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது.
மொத்தம் 100 குழந்தைகள் உட்பட 240 பேரின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சூப்பர் மார்க்கெட் அமைப்பதற்கு முன்பாக அந்த இடம் ஒரு கல்லறையாக இருந்திருக்கலாம் எனவும், தற்போது கிடைத்துள்ள எலும்புக்கூடுகள் 300 ஆண்டுகளுக்கு முன்பாக புதைக்கப்பட்டவையாக இருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.