Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை : மெலனியா ட்ரம்ப் நெகிழ்ச்சி!

டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட சென்ற மெலனியா ட்ரம்ப், பள்ளி மாணவர்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி என கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது மனைவியுடன் வருகை தனது மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள அரசு பள்ளியை மெலனியா ட்ரம்ப் பார்வையிட சென்றார். அவருக்கு ஆரத்தி எடுத்து பள்ளிக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் முறையை நேரில் பார்வையிட்டு ரசித்த மெலனியா ட்ரம்ப், தொடர்ந்து மாணவர்கள் நடத்திய நடன நிகழ்ச்சியை கண்டு கழித்தார்.

மாணவர்கள் மத்தியில் பேசிய மெலானியா டிரம்ப், இந்தியாவுக்கு நான் முதன்முறையாக வருகிறேன், மக்கள் மிகவும் அன்பாக வரவேற்றனர் என கூறியுள்ளார். இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று நிகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி கூறிய மெலனியா, டெல்லி பள்ளியின் மகிழ்ச்சி வகுப்பு உத்வேகம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |