Categories
தேசிய செய்திகள்

திருப்பதி மலைப் பாதையில் 12 கி.மீ தூரத்திற்கு…. தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதை வழியாக வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இதனிடையில் அலிப்பிரியிலிருந்து திருமலைக்குச் போகும் வாகனங்களின் நேரம் குறிக்கப்பட்டு 45 நிமிட நேரத்தில் மட்டுமே வாகனங்கள் திருமலைக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மலைப் பாதையில் அதிவேகத்தில் போகும் வாகனங்களால் விபத்து ஏற்படுவதால் நேரம் குறிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. அத்துடன் சரியாக 45 நிமிடத்துக்கு குறைவான நேரத்தில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இதற்கிடையில் மலைப் பாதையில் அடிக்கடி சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் வந்து விடுகிறது. இதன் காரணமாக வாகனங்கள் மற்றும் வன விலங்குகளை கண்காணிக்க மலைப் பாதையில் சிசிடிவி கேமராக்களை பொருத்த தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது. அந்த வகையில் அலிப்பிரியில் இருந்து திருமலைக்கு வரும் 18 கி.மீ தூரத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு 5 கேமராக்கள் வீதம் 90 கேமராக்கள் பொருத்தப்பட இருக்கிறது.

திருமலையிலிருந்து திருப்பதிக்கு வரக்கூடிய மலைப் பாதையில் 12 கி.மீ தூரத்திற்கு 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மலைவளைவுகள் மற்றும் அதிகதூரம் கவரக்கூடிய வகையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி 24 மணிநேரம் கண்காணிக்கப்பட்டு மலைப் பாதைகளில் வாகன விபத்து ஏற்பட்டாலோ (அல்லது) வனவிலங்குகள் புகுந்தாலோ உடனே போலீசார் மற்றும் ஆக்டோபஸ் அதிரடிப்படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்து மீட்புபணியில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். முன்னதாகவே திருமலை முழுதும் மொத்தம் 1,679 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |