தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு சிறப்பான விமர்சனங்கள் எழுதும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.அதன்படி தற்போது அரசு பள்ளிகளில் உள்ள ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் இந்த படங்கள் திரையிடப்படுகின்றது. அவ்வகையில் இந்த வாரம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரெஞ்சில் வெளியான குறும்படமான the red baloon என்ற திரைப்படம் திரையிடப்பட உள்ளது. கடந்த 1956 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஆல்பர்ட் லெமோரிஸ் இயக்கியுள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற இந்த குறும்படம் இன்று தமிழக முழுவதும் மாணவர்களுக்கு திரையிடப்படுகிறது.