இந்திய ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி போனசை மத்திய அரசு அறிவித்துள்ளது. 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு 1832 கோடியை ஒதுக்கியுள்ளதாக அண்மையில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். மேலும் 78 நாள் சம்பளம் போனஸ் ஆக கிடைக்கின்றது. அதாவது அதிகபட்சமாக 17951 ரூபாயாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.இதனைத் தவிர நாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 22,000 கோடி மானியமாக மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த மானியம் எல்பிஜி விலை உயர்வின்போது எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் இழப்பை ஈடு செய்ய உதவும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்,இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு முறை மானியத்தை மத்திய அரசு தற்போது ஒதுக்கியுள்ளது.