Categories
மாநில செய்திகள்

மக்களே! உஷார்… மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்வீழ்ச்சி பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் நடப்பு நீர் பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக அணை மீண்டும் நிரம்பியுள்ளது. இதனை அடுத்து அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது 25 நாட்களுக்குப் பின் அணையின் உபரி நீர் போக்கி மதகுகள் புதன்கிழமை காலை 5:30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முன்னதாக எச்சரிக்கை சங்கு ஒழிக்கப்பட்டுள்ளது அதில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தற்போது அதிகரித்து இருக்கின்ற காரணத்தினால் வியாழக்கிழமை 11:30 மணியளவில் மேட்டூர் அணையிலிருந்து 35,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என அனைத்து பொறியாளர்கள் கூறியுள்ளனர். மேலும் நீர் மின் நிலையங்கள் வழியாக 21,500 கன அடி தண்ணீரும் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 13 ஆயிரத்து 500 கன அடி நீரும் வெளியேற்ற இருக்கின்றனர்.இந்த நிலையில் தற்போது 28 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது 11:30 மணியளவில் 36 கனடியாக அதிகரித்து வெளியேற்றப்படுகிறது இதனை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |