Categories
அரசியல் மாநில செய்திகள்

50 வருஷம் அச்சு…! அந்த 3 வார்த்தை தான்.. தலைவரா சும்மா உக்கார வைக்கல…!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய முதல்வர்  தன்னுடைய உழைப்பால், கிட்டதட்ட 55-56 காண்டு கால உழைப்பு, தலைவர் என்று அவரை சும்மா எல்லாம் உட்கார வைக்கலை,  50 வருடம் ஆகிவிட்டது. அவரை பார்த்து முத்தமிழறிஞர் கலைஞர்…

எனக்கு ஸ்டாலினிடம் பிடித்தது உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று அந்த மூன்று வார்த்தையை வாங்குவதற்கு 50 வருடம் அவர் உழைக்க வேண்டியதாக இருந்தது. அப்படிப்பட்ட தலைவரை தான் நம்முடைய பொதுக்குழு ஒருமனதாக தலைவர் என்று ஏற்று இருக்கிறது. ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், சேகர் பாபு அண்ணன் மாவட்ட செயலாளராக  வந்ததிலிருந்து சுற்றி வேலை செய்து கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு பகுதி பகுதியாக ஓடுகிறார், ஏன் மூன்று நாட்களுக்கு முன்பு கூட,  அவருடைய தொகுதியில் ஒரு பள்ளியில் நான் ஆய்வு செய்ய சென்றேன். அங்கு இருக்கின்ற தலைமையாசிரியரிடம் சொன்னேன், இது மாதிரி உங்களுடைய தொகுதி எம்எல்ஏ.. உங்களுடைய அமைச்சர் என்க பகுதி பள்ளி எல்லாம் பாருங்கள் என்று, உங்களுடைய பள்ளிக்கூட பிள்ளைகள் எல்லாம் எப்படி படிக்கிறார்கள் ? அவருடைய வசதி எல்லாம் பாருங்கள் என்று சொன்னார்கள்..

அதனால் நான் வந்திருக்கிறேன் என்று சொன்னேன். உடனே அவர்கள் அவரா சார்… அவர் அந்த காலத்தில் இந்த பக்கம் சைக்கிளில் வந்துவிட்டு,  உள்ளே வந்துவிட்டு எங்களுக்கு என்ன தேவையோ ? எல்லாவற்றையும் செய்து கொடுத்துவிட்டு போவார். அதெல்லாம் எங்களால் மறக்கவே முடியாது என்று சொல்லும்போது… இதெல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷன் எங்களுக்கு..

நீங்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும்,  எவ்வளவு பெரிய பதவிகள் இருந்தாலும்,  மக்களிடம் இறங்கி போய் வேலை செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்கிறோம். அந்த கற்றுக்கொள்வதற்கு நாம் ஒரு தலைவர் தேவைப்படுகிறார். அந்த தலைவர் தான் இன்றைக்கு நம்மை ஆண்டு கொண்டிருக்கின்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |