மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் டம் இதுவரையிலும் ரூபாய்.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில் இன்னும் சில தினங்கள் ரூ.500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய்.163 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமெரிக்காவில் அதிக வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
Crosses-400
Crores!!!!
இந்து என்ற மதம்
இன்று
இந்து என்ற பிரச்சனையாக
மதம்மாறி விட்டது!
இந்த எழுத்தும் ஏதோ ஒரு
பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்!
எழு ப்பினால் …
இன்னும் ஒரு 100!— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 13, 2022
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் “Crosses-400 Crores!!!! இந்து என்ற மதம் இன்று, இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது. இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்! எழு ப்பினால்.. இன்னும் ஒரு 100!” என்று பதிவிட்டுள்ளார். அதன்படி, இந்துமதம் என்ற சர்ச்சையால் பொன்னியின் செல்வன் ரூபாய்.400 கோடி வசூலித்துவிட்டது. அத்துடன் இந்த விவாதம் வலுத்தால் மேலும் ரூபாய்.100 கோடியை வசூலிக்கும் என்று நடிகர் பார்த்திபன் மறைமுகமாக சொல்கிறாரா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.