Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு கஞ்சத்தனம்!… 2 ரூமுக்கு ஒரு AC…. வெளியான புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அனுராக் மைனஸ் வர்மா என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் “சென்ற 2011ஆம் வருடம் மும்பையில் ஒரு அறையை புக்செய்தேன். இந்நிலையில் அங்கிருந்த மேலாளர் ஏசி அறையை பிரித்து தருவதாக உறுதியளித்தார். ஆனால் அது இப்போது 2 அறைகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு ஏசி அறையாக இருக்கிறது” என நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.

 

அவர் வெளியிட்ட அப்புகைப்படத்தில் 2 அறைக்கு சேர்த்து 1 ஏசி பொறுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன் இந்த ஏசியின் ரிமோட் எதுவும் வழங்கப்படாததால் அதன் வெப்பநிலையை மாற்றுவது (அல்லது) அதை அணைப்பது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |