பிரபல இயக்குனர் கல்யாண். 2019 ஆம் வருடம் நடிகர் பிரபுதேவா ஹன்சிகா நடிப்பில் வெளியான குலேபகாவலி படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு நடிகை ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ஜாக்பாட் படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இவருடைய காரை சோதனை செய்த போலீசார் பின்னர் அவரை பரிசோதனை செய்தபோது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதித்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய காரையும் பறிமுதல் செய்தனர்.