நடிகர் ஷாருக்கான் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் திரைப்படத்தில் ராஜா ராணி, மெர்சல், தெறி, மற்றும் பிகில் போன்ற படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர் அட்லி. தற்போது இவர் இந்தியில் “ஜவான்” என்ற திரைப்படத்தை டைரக்டு செய்து வருகின்றார். இதில் கதாநாயகனாக ஷாருக்கான், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படத்தில் பிரியாமணி மற்றும் யோகிபாபு போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். “ஜவான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக சென்னையில் நடந்துள்ளது.
இதற்காக ஷாருக்கான் சென்னை முகாமிட்டு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையிலுள்ள ஷாருக்கான் ரசிகர்கள் அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து படப்பிடிப்புக்கு இடையில் சென்னை ரசிகர்களை ஷாருக்கான் சந்தித்துள்ளார். மேலும் ஷாருக்கான் ரசிகர்களை தான் தங்கிருந்த 5 ஸ்டார் ஓட்டலுக்கு வரவழைத்தார். பின்னர் அங்கு அவர்களுக்கு அறைகள் ஒதுக்கி தங்க வைத்து விரும்பிய உணவை சாப்பிட வைத்து விருந்து கொடுத்தார். இதனை அடுத்து சிறிதுநேரம் அவர்களுடன் ரசிகர் மன்ற பணிகள் குறித்து பேசியுள்ளார். பின்னர் ரசிகர்களுடன் தனித்தனியாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். மேலும் ரசிகர்களை ஷாருக்கான் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.