சென்னை அம்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விகி ஆன்லைன் உணவுடெலிவரி வாயிலாக KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்து இருக்கிறார். இதையடுத்து கொஞ்ச நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்ததும் அவர் அதனை வாங்கி திறந்து பார்த்துள்ளார். அப்போது சிக்கன் வேகாமல் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக KFC அம்பத்தூர் கிளையில் புகாரளித்த நிலையில், எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர்.
அதன்பின் தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் நடைபெற்ற சம்பவம் குறித்து SWIGGY நிறுவனம், KFC நிறுவனம் மற்றும் இந்திய உணவு தர கட்டுப்பாட்டு வாரியம் (FSSAI) போன்றவற்றை tag செய்து பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ஸ்விகி மற்றும் Kfc நிறுவனங்கள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இது பற்றி உடனே விசாரணை மேற்கொள்வதாக உறுத்தியளித்தனர்.
அதனை தொடர்ந்து உணவகத்தில் சமைக்காத சிக்கனை வாடிக்கையாளருக்கு வழங்கபட்ட சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவ்வாறு ஆய்வு மேற்கொண்டபோது, சேகர் என்பவருக்கு வழங்கப்பட்ட சிக்கன் மட்டுமே வேகாத நிலையில் இருந்ததாக கூறினர். வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனையை வீடியோவாக டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பதிவிட்டால் மட்டுமே தீர்வு கிடைப்பதாகவும், புகாரளித்தால் எந்த தீர்வும் கிடைப்பதில்லை என்றும் KFC உணவு வாங்கிய வாடிக்கையாளர் வேதனை தெரிவித்து இருக்கிறார்.