Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”.. தோண்ட தோண்ட வந்த எலும்புக்கூடுகள்…. அதிர்ச்சியில் கட்டிட பணியாளர்கள்… பீதியில் மக்கள்…!!!

இங்கிலாந்து நாட்டில் இருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றின் அஸ்திவாரத்தை தோண்டிய போது, அதில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் இருக்கும் ஹாவர்ஃபோர்ட்வெஸ்த் என்ற பகுதியில் அமைந்துள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் 2013 ஆம் வருடத்திலிருந்து அடைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அதனை இடிக்கும்  பணி நடக்கிறது. எனவே பணியாளர்கள் அஸ்திவாரத்தை தோண்டியுள்ளனர். அப்போது அதிலிருந்து மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டது.

இதனால் கட்டுமான பணியாளர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக தொல்பொருள் ஆய்வாளர்களும் புலனாய்வு அமைப்பினரும் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்களின் கண்காணிப்பில் அஸ்திவாரம் மேலும் தோண்டப்பட்டது. அப்போது சுமார் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளின் எலும்பு கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் பீதி அடைந்திருக்கிறார்கள். இது பற்றி தொல்பொருள் அறக்கட்டளையினுடையே மேற்பார்வையாளராக இருக்கும் ஆண்ட்ரூ ஷோப்ரூக் என்பவர் தெரிவித்ததாவது, அந்த இடத்தில் சுமார் 300 வருடங்களுக்கு முன் சுடுகாடு இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

அந்த எலும்பு கூடுகள் ஆய்வு செய்யப்பட்டது. அந்த எலும்புக்கூடுகளில் உள்ள காயமானது, போர் ஏற்படும்போது நடந்த காயங்கள் போன்று இருக்கிறது. தற்போது வரை, சுமார் 240 நபர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |