பான்கார்டு வைத்திருப்போர் தங்களது பான்அட்டை தொலைந்துபோனால் (அல்லது) திருட்டு போனால் வருமானவரித் துறையிடம் இருந்து டூப்ளிகேட் பான் அட்டையை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முதலாவதாக வருமானவரி பான் சேவைகள் பிரிவின் இணையதளத்திற்கு போகவேண்டும். அப்போது பல்வேறு விருப்பங்கள் இங்கு தோன்றும். அதிலிருந்து ‘Reprint of PAN Card” எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விருப்பமானது முன்பே பான் கார்டு பெற்றவர்களுக்கு மட்டும் கிடைக்கும். இது முன்பே பான் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பான் அட்டையை மறுபடியும் தேவைப்படுபவர்களுக்குரிய அம்சமாகும்.
இவ்விருப்பத்தை பயன்படுத்தக்கூடிய விண்ணப்பதாரருக்கு புது பான்கார்டு வழங்கப்படுகிறது. ஆன்லைன் படிவத்தின் அனைத்து காலம்களையும் பூர்த்தி செய்து தகவலை வழங்க வேண்டும். இடதுவிளிம்பு பெட்டியில் எந்த விருப்பத்தையும் டிக் செய்யகூடாது. அதன்பின் 105 ரூபாய் செலுத்தவும். இந்த கட்டணத்தை கிரெடிட், டெபிட்கார்டு, நெட்பேங்கிங், டிமாண்ட் டிராப்ட் (அல்லது) காசோலை வாயிலாக செலுத்தலாம். இந்த செயல்முறைகள் அனைத்தையும் முடித்தபின், படிவத்தைச் சமர்ப்பித்து “Aknowledgement Slip”ஐ பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ரசீதில் 2.5 செ.மீ முதல் 3.5 செ.மீ அளவுள்ள வண்ணப்புகைப்படத்தை ஒட்டி, பின் கையெழுத்திடவும்.
டிமாண்ட் டிராஃப்ட் (அல்லது) காசோலை வாயிலாக கட்டணத்தைச் செலுத்தினால், அதன் நகல் இணைக்கப்படவேண்டும். மேலும் உங்களது அடையாளச்சான்று, முகவரிச்சான்று, பிறந்ததேதி சான்று போன்றவற்றை இணைத்து புனேவிலுள்ள NSDL அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த 15 தினங்களுக்குள் உங்களது ஆவணங்களை குறிப்பிட்ட முகவரியில் சேர்த்து விட வேண்டும். 15 தினங்களுக்குள் நீங்கள் நகல் பான்கார்டைப் பெறுவீர்கள். இதனிடையில் தாங்கள் பான்கார்டின் நிலையினை அறிய விருப்பப்பட்டால், NSDLPAN எனும் தட்டச்சு செய்து இடம்விட்டு உங்களது ஒப்புகைஎண்ணை உள்ளிட்டு 57575 என்ற எண்ணிற்கு அனுப்பவேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பத்தகவல்
# முதலாவதாக துறையின் www.tin-nsdl.com எனும் இணையதளத்தைத் திறக்க வேண்டும்.
# முகப்புப் பக்கத்தில் ரீ பிரிண்டிங் விருப்பத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
# சாளர பக்கத்தின் கீழேயுள்ள “Reprint of PAN Card” எனும் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
# அதன்பின் புது பக்கத்தில் உங்களது பான்எண், ஆதார் எண், பிறந்ததேதி தகவல்களை நிரப்பி தேர்வுப் பெட்டியைக் கிளிக் செய்யவேண்டும்.
# மின்னஞ்சல் ஐ.டி, மொபைல் எண் ஆகிய OTPக்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். விண்ணப்பம் OTP வாயிலாக சரிபார்க்கப்படும். அடுத்ததாக மொபைல் எண் மற்றும் மின் அஞ்சல் ஐடி அசல் பான்கார்டுடன் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
# தற்போது “Generate OTP” பட்டனை அழுத்த வேண்டும். பின் 10 நிமிடங்களுக்கு செல்லுபடியாகும் OTPஆனது பெறப்படும்.
# OTP-யை உள்ளிட்டபின் 50 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தி, பிரிண்ட் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து பிரிண்ட் எடுக்கவேண்டும்.
# பிறகு மொபைலிலும் செய்தியைப் பெறுவீர்கள். அத்துடன் இச்செய்தியில் இ-பான்கார்டைப் பதிவிறக்குவதற்குரிய இணைப்பு இருக்கும்.