முதல் தடவையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுற்றுலா சென்ற டென்னிஸ் டிட்டோ சந்திரனுக்கு சுற்றுபயணம் செய்ய ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் வருடத்தில் டென்னிஸ் டிட்டோ என்ற நபர் விண்வெளி நிலையத்திற்கு முதல் தடவையாக அவரது சொந்த செலவில் சுற்றுலா சென்றார். தற்போது 21 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு துணிச்சல் மிகுந்த சாகசத்தை மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறார். அந்த வகையில் 82 வயதாகும் அவர், எலான் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கடந்த வருடம் ஒப்பந்தம் மேற்கொண்டார்.
ஐந்து வருடங்களுக்குள் சந்திரனுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டமது. இதில் டிட்டோ, அவரின் மனைவி உட்பட சுமார் பத்து பேர் செல்ல இருக்கிறார்கள். முதல் தடவையாக சந்திரனுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக தடை இல்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான பல பரிசோதனைகள் ஸ்டார்ஷிப் விண்கலம் மேற்கொள்ளவிருக்கிறது.
இது குறித்து டிட்டோ தெரிவித்ததாவது, ஜான் கிளென் முதல் அமெரிக்கராகவும், முதியவராகவும் பூமியை சுற்றி வந்து சாதனை படைத்தார். அவரைவிட எனக்கு 10 வயது அதிகம் என்று தெரிவித்திருக்கிறார்.