Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! நஷ்டத்தில் பைஜூஸ் நிறுவனம்….. திடீரென எடுத்த அதிரடி முடிவு…. பெரும் அதிர்ச்சி…..!!!!

இந்தியாவில் பைஜூஸ் நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நிறுவனத்தை லாபகரமானதாக மாற்றுவதற்காக 2500 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நிறுவனத்தின் லாபம் 231.69 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ரூ. 4,588 கொடி நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நிறுவனத்தின் செலவுகள் ரூ. 2,874.34 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டில் ரூ. 7,027.47 கோடியாக செலவுகள் அதிகரித்துள்ளது.

இதனால்தான் தற்போது பைஜூஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் கவனம் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பணியாளர்களை நீக்கம் செய்வதன் மூலம் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் கண்டிப்பாக நிறுவனம் லாபத்தை அடையும் என்று இந்திய வணிகத்தின் தலைமை அதிகாரி மிருணாள் மோகித் தெரிவித்துள்ளார். மேலும் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை அதிகரித்து நிறுவனத்தை சிறப்பான பாதையை நோக்கி கொண்டு செல்வதன் மூலம் லாபத்தை கண்டிப்பாக எட்ட முடியும் எனவும் மிருணாள் மோகித்  கூறியுள்ளார்.

Categories

Tech |