Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நடக்கும் பாலியல் குற்றங்கள்… ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் ஒரு புலனாய்வு பிரிவு மேற்கொண்ட ஆய்வின்படி நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து இருக்கிறது. எனினும் அந்த வழக்குகள் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையின் விகிதமானது 0.2 சதவீதம் தான் இருக்கிறது.

2017 ஆம் வருடத்தில் 3327 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு அடுத்த வருடத்தில் அந்த வழக்குகள் 4456 ஆகவும், 2019 ஆம் வருடத்தில் 4573 ஆகவும் அதிகரித்து இருக்கிறது. மேலும் கடந்த வருடத்தில் 5169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இது மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் கௌரவ கொலைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அதனை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச அமைப்புகள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. மேலும், உலக பொருளாதார மன்றம் தன் அறிக்கையில், பாலின பாகுபாட்டில் இரண்டாவது மோசமான நாடாக பாகிஸ்தானை குறிப்பிட்டிருக்கிறது.

Categories

Tech |