தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை மற்றும் நடிகர் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் கதைக்களத்தில் பேட்டைகாளி என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த வெப் தொடரை அண்ணனுக்கு ஜே என்ற திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்க, நடிகர் கலையரசன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள பேட்டைக்காளி வெப் தொடர் வருகிற 21-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த டிரைலர் தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Super Intense trailer of #Pettaikaali , series on @ahatamil from Oct 21sthttps://t.co/UeZJDACBCj
All the best @la_rajkumar @Music_Santhosh @KalaiActor & whole team 👍
— karthik subbaraj (@karthiksubbaraj) October 13, 2022