திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, எல்லோரும் சொன்னார்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகு, ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. வெற்றிடத்தை விட்டுட்டு போய்விட்டார் என்று சொன்னார்கள், அவர் விட்டு சென்றது வெற்றிடம் அல்ல, அவர் விட்டுட்டு சென்றது சரித்திரம்.
அந்த சரித்திரத்தை நிரப்பக்கூடிய திறமை உள்ள, தகுதி உள்ள ஒரு தலைவர் யார் என்று சொன்னால், அது நம்முடைய தளபதி அவர்கள் தான் என்பதை ஒட்டுமொத்த நாடே, ஏன் ? உலகமே இன்றைக்கு ஒத்துக் கொண்டிருக்கிறது.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்றான் பாரதி
ஒரு மூன்று நாட்களுக்கு முன்பு நம்முடைய முதலமைச்சர் சட்டமன்றத்தில் உரையாற்றினார். நாம் ஆட்சிப் பொறுப்புக்கு ஏற்ற பிறகு, 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியை தேடி வருகை தந்திருக்கிறார்கள் என்று சொல்லும் போது, இதெல்லாம் இந்த அரசாங்கத்தின் மீதும், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் மீதும் இருக்கின்ற ஒரு நம்பிக்கை.
இந்த நம்பிக்கை இன்றைக்கு முதலமைச்சராக மட்டுமல்ல, இயக்கத்தினுடைய தலைவராக இருந்த போதும் சரி, ஏன் ? அதற்கு முன்பு செயலளராக இருந்தபோதும் சரி, ஏன் அதற்கு முன்பு இளைஞர்னுடைய செயலாளராக இருந்த போதும், தொடர்ந்து மக்களுடைய மனதில் தனக்கென்று ஏன் ? குறிப்பாக பள்ளி மாணவச் செல்வங்கள் உடைய இதயத்தில் தனக்கென்று ஒரு இடத்த்தை பிடித்தவர்தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் என தெரிவித்தார்.