Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் வேலைக்கு வரவில்லை? தனியார் நிறுவன மேற்பார்வையாளர் அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நரசமங்கலம் கிராமத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சித்ராஞ்சித்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிபுரம் அருகே தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சித்ராஞ்சித் வேலைக்கு செல்லாததால் அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் வேலன் என்பவர் வாலிபர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது சித்ராஞ்சித் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த வேலன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சித்ராஞ்சித் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |