Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோவை BJP அலுவலகம் தாக்குதல்: 2பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ..!!

கடந்த மாதம் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் அலுவலகங்கள் மீதும், வீடுகள் மீதும் பெட்ரோல் பாட்டில் குண்டு வீச்சு மற்றும் எரிபொருள் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் மீது கண்டிப்பாக தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என முன்னரே போலீஸ்  எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இந்த நிலையில் கோவையில் பிரதான பகுதியான வி.கே.கே மேனன் சாலை பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சதாம் உசேன் மற்றும் அகமது அகமது சிதாமுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு,  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான நகல்கள் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை தரப்பில் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |