ஆட்டோ டிரைவர் கடத்திச் சென்ற பிளஸ் 2 மாணவியை போலீசார் மீட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் நகர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்த மாணவி தனது வீட்டில் இருந்து திடீரென காணாமல் போய் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் மாணவியை ஆட்டோ டிரைவர் சீனிவாசன் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் அவரிடமிருந்து மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.