செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையை பொருத்தவரை நம்முடைய அம்மா அரசு இருக்கும்போது, உயர்கல்வி மன்ற வளாகத்தில் அம்மாவுடைய திருவுருவுச்சலை அமைக்கப்பட்டு, தினம் தோறும் மாலை அணிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இடையில் விடியா அரசு, திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பேற்ற பிறகு.. அதுக்கு பூட்டு போட்டுட்டாங்க. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. நாங்களாவது பராமரித்துக் கொள்கின்றோம் என்று லெட்டர் எழுதி கேட்டோம், அதுவும் எங்களுக்கு கொடுக்கல.
இப்போ PWD பராமரிக்கும் என சொல்லுறாங்க. விழா கொண்டாடுவது டிபார்ட்மென்ட் என சொல்லி, ஜிஓ போட்டு விட்டார்கள். இப்போ உள்ள சூழ்நிலையில் 17ஆம் தேதி அன்று திருவுருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே மாலை அணிவிக்கப்பட வேண்டும். எனவே அதுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற வகையிலே பூட்டை திறங்க, புல் புதருமாக இருப்பதை எல்லாம் சரி பண்ணி குடுங்க.. அம்மாவுடைய திருவச் சிலைக்கு மாலை அணிவிக்கிறோம் என்று… காலையிலே நிர்வாகப் பொறியாளரிடம் நானே பேசினேன்…
அவர் 12 மணிக்கு வாங்கன்னு சொன்னாரு. சரியாக 12 மணிக்கு நாங்களும் வந்துட்டோம். ஆனா சீட்ல ஆள் இல்லை. அதுக்குள்ள என்ன ஆச்சு ? எங்கன்னு கேட்டா, தெரியலன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டில் ஒரு எக்ஸிகியூட்டி இன்ஜினியரையே தேடுற அளவுக்கு இருக்கு. தமிழ்நாட்டினுடைய முன்னாள் சபாநாயகர், தமிழ்நாட்டின் உடைய 15 வருடம் மந்திரி, தமிழ்நாட்டுக்கு… ராயபுரம் சட்டமன்றத்தின் தொடர்ந்து ஐந்து முறை, 25 வருஷம் தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். நானே வந்து எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியரை பார்க்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்குன்னா, பெட்டிஷன் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்குன்னா… இந்த விடியாத அரசுல, எப்படிப்பட்ட நிலைமை இருக்குன்னு பார்த்துக்கோங்க என வேதனை தெரிவித்தார்.