Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் “சர்தார்”…. வெளியான புதிய அப்டேட்…. குஷியில் ரசிகர்கள்….!!!!!

நடிகர் கார்த்தி நடிக்கும் “சர்தார்” திரைப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது நடித்து வருகின்றார். நடிகர் கார்த்தி நடிக்கும் “சர்தார்” என்ற  திரைப்படத்தில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

“சர்தார்” திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், “சர்தார்” திரைப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் இத்திரைப்படத்தின் டிரைலர் நாளை (அக்டோபர் 14) வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |