அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனைவி மெலானியா டெல்லி மாநில பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியை கண்டு கழித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது மனைவியுடன் வருகை தனது மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள அரசு பள்ளியை மெலனியா ட்ரம்ப் பார்வையிட சென்றார். அவருக்கு ஆரத்தி எடுத்து பள்ளிக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் முறையை நேரில் பார்வையிட்டு ரசித்த மெலனியா ட்ரம்ப், தொடர்ந்து மாணவர்கள் நடத்திய நடன நிகழ்ச்சியை கண்டு கழித்தார்.
இதனை மெலனியா ட்ரம்ப் பார்த்துக் கொண்டு இருந்த போது அங்குள்ள மழலையர் உற்சாக மிகுதியில் ஆடி மகிழ்ந்தனர். கையில் அமெரிக்க நாட்டின் கொடியை வைத்துக்கொண்டு குத்தாட்டம் போட்ட மழலையில் ஆட்டத்தை பார்த்த மெலனியா ட்ரம்ப் மெய்மறந்து கைதட்டி ரசித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
#WATCH Delhi: First Lady of the United States, Melania Trump watches a dance performance by students at Sarvodaya Co-Ed Senior Secondary School in Nanakpura. pic.twitter.com/dBCuTzvymF
— ANI (@ANI) February 25, 2020