Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பத்து நாள்ல வந்துவிடுவேன்”…. கணவரை மீட்டுத் தருமாறு…. போலீசில் புகார் அளித்த பெண்….!!!!

காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு போலீஸ் சூப்பிரண்டுக்கு பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீராளி காட்டுவிளை பகுதியில் ஜாய்ஸ் என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது “எனது கணவரான ஜேக்கப் கடந்த மாதம் திருப்பூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின் மறுநாள் அவர் திருப்பூர் சென்றடைந்ததாகவும் 10 நாட்களில் ஊருக்கு திரும்பி விடுவேன் எனவும் கூறினார்.

பிறகு அவருடைய போனுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் அங்குள்ள உற்றார் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நான் விசாரித்தேன். ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. எனவே காணாமல் போன எனது கணவரை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். இந்த மனுவின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதித்து காணாமல் போன ஜேக்கப் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |