Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்ல வேலை….!!!! just missla escape…. பற்றி எரிந்த வாகனத்தால்…. நாகையில் பெரும் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் வெள்ளாண்டி வலசு பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக காலையில் மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதனை அடுத்து சிறிது நேரம் கழித்து சார்ஜ் ஏற்றுவதை நிறுத்திவிட்டு ஸ்கூட்டரில் அலுவலகத்திற்கு புறப்படுவதற்கு தயாராகியுள்ளார். அந்த சமயத்தில் ஸ்கூட்டர் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

இந்த தீ மளமளவென பரவி வாகனம் முழுவதும் பற்றியதால் வரதராஜன் வண்டியை அப்படியே விட்டு விட்டு பயத்தில் அங்கிருந்து கத்திக்கொண்டு ஓடியுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். இது குறித்து அவர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் தீயணைப்பு வீரர்கள் அங்கு வருவதற்குள் வாகனம் முழுவதும் எரிந்து முடிந்து விட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |