நீலகிரி மாவட்டத்தில் ஆணைசெத்ததொல்லி பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு யானை ஒன்று புகுந்துள்ளது. அதன் பின் பொதுமக்களின் வீடுகளை யானை சுற்றி சுற்றி வந்தது. இந்நிலையில் அங்கு புகழேந்திறன் என்பவர் வீடு கட்டி வசித்து வருகின்றார். அவருடைய வீட்டின் முன்பக்க சுவரை யானை இடித்து தள்ளியுள்ளது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புகழேந்திரனின் மகளான கர்ப்பிணிப் பெண் நந்தினி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதனை அடுத்து யானை வந்திருப்பதை அறிந்த புகழேந்திரன் குடும்பத்தினர் மற்றொரு அறைக்கு சென்று பாதுகாப்பாக பதுங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து யானை தனது தும்பிக்கையால் சமையலறையில் உள்ள உணவுப்பொருட்களை தின்றுது. இதுகுறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் பொதுமக்கள் வனத்துறையினருடன் இணைந்து காட்டு யானையை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். அந்த சமயத்தில் சேதமடைந்த வீட்டை மறு சீரமைக்க இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என புகழைந்திரன் குடும்பத்தினர் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட வனத்துறையினர். உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். மேலும் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை கேரள வனத்துக்குள் விரட்டியடிக்க உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டது.