Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்-விக்கிக்கு பிறந்த குழந்தைகள்”…. பிரபலத்திடம் இருந்து பறந்து வந்த கடிதம்….!!!!!!

ஆண் குழந்தைகள் பிறந்த நயன்&விக்கிக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியினருக்கு சென்ற ஒன்பதாம் தேதி 2 ஆண் குழந்தைகள் பிறந்தது. இது குறித்து விக்னேஷ் சிவன் தகவல் வெளியிட்டதை தொடர்ந்து வாழ்த்துகளும் விமர்சனங்களும் வெளியாகி வருகின்றது.

மேலும் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்ற விஷயம் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு நடிகர் கார்த்தி ஒரு வாழ்த்து கடிதம் அனுப்பி இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பெற்றோர்களின் அணிக்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் நான்கு பேரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |