ஆபாச படம் அனுப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும் திருச்சி அண்ணா நகரை சேர்ந்த ராகுல்(22) என்பவருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பழக்கம் ஏற்பட்டது. ராகுல் அந்த மாணவியின் செல்வன் எண்ணை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் ராகுல் மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் ராகுலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.