Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“வழக்கறிஞருக்கு ரூ. 25 ஆயிரம் நஷ்ட ஈடு” அடையாள அட்டை வழங்குவதில் தாமதம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூரில் வழக்கறிஞரான முருகபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017- ஆம் ஆண்டு முருகபாண்டியன் மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலக அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளார். பின்னர் தலைமை தபால் நிலைய அலுவலரிடம் பலமுறை அடையாள அட்டையை தருமாறு கேட்டுப் பார்த்தும், அவர்கள் காலம் தாழ்த்தி வந்தனர்.

இதனால் முருகபாண்டியன் அப்போதைய ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலக கண்காணிப்பாளர், தலைமை அஞ்சல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர் முருக பாண்டியனுக்கு 20000 ரூபாய் நஷ்டஈடாகவும், 5 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகையையும் கொடுக்கும்படி எதிர் மனுதாரர்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.

Categories

Tech |