Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவின் “வெந்து தணிந்தது காடு”….. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு….. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு நடித்த ஏராளமான சூப்பர் ஹிட் படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். கடந்த சில வருடங்களாக சில பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்த சிம்பு இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் கடந்த மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான வெந்து தணிந்தது காடு திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான 3-வது படம் ஆகும். இந்த படத்தில் சித்தி இத்னானி ஹீரோயினாக நடிக்க ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். அதன் பிறகு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு ஒரு சொகுசு கார், கௌதமேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் மற்றும் படத்திற்கு நல்ல பிரமோஷன் செய்த கூல் சுரேஷ்க்கு ஒரு ஐபோன் போன்றவற்றை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 21-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் இந்த தகவலை ஒரு போஸ்டருடன் அமேசான் பிரைம் வீடியோ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |