கலிபோர்னியா வளைகுடாவில் சட்டவிரோத மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை திமிங்கலத்தை விலங்கு நல ஆர்வலர்கள் பாத்திரமாக மீட்டனர்.
மெக்சிகோ அருகே கலிபோர்னியா வளைகுடாவில் விலங்கு நல ஆர்வலர்கள் கடலில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஹம்ப்பேக் (Humpback) வகை திமிங்கலம் ஓன்று சட்ட விரோதமாக விரிக்கப்பட்ட வலையில் சிக்கி தவித்து வருவதை பார்த்த ஆர்வலர்கள் அதனை காப்பாற்றுவதற்கு போராடினர். அவர்கள் நீண்ட முயற்சிக்கு பின் அதை பத்திரமாக விடுவித்தனர்.
தற்போது அழியும் நிலையில் இருக்கும் ‘டோட்டோபா’ என்ற மீனை பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையில் திமிங்கலம் சிக்கியிருக்கலாம் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த டோட்டோபா மீன் மிகவும் அதிக விலைக்கு போகும் என்பதால் அதனை பிடிப்பதற்காக மீனவர்கள் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.