மேகதாது பகுதியில் அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஒரு ஆண்டுக்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் மத்திய நீர்வளத் துறை ஆணையர் ஏ.கே.சின்கா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு , கர்நாடகா , கேரளா , புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தற்போது நிலுவையில் இருக்க கூடிய தண்ணீர் தொடர்பான விஷயம் பேசப்பட்ட நிலையில். மேகதாதுவில் அணை கட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தமிழக அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் மேகதாது அணை அமைக்கப்பட்டால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்று குறிப்பிட்ட அதிகாரிகள் , தமிழகத்து குடிநீர் கூட கிடைக்காத சூழல் ஏற்படும் , எனவே மேகதாது அணை கட்டுவது தொடர்பான எந்தவிதமான முயற்சியும் ஈடுபடக் கூடாது. நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம். மத்திய அரசு அனுமதி வழங்கினாலும் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் ஆணித்தனமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை அமைக்க கூடிய பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வர கூடிய நிலையில் , தமிழக அரசின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு இந்த காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மிக அழுத்தமாக பேசியுள்ளார்கள் தமிழக அதிகாரிகள். அடுத்த காவேரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த தினமும் இதே போன்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்த இருக்கின்றார்கள்.
மொத்தத்தில் நீதிமன்றம் , மத்திய அரசு , ஆணைய கூட்டம் என மூன்று இடங்களிலும் மேகதாது அணை விவகாரத்தில் ஒரே கருத்தை முதமிழகம் ன்வைத்து வருகின்றது தமிழகம். தமிழக அரசு தொடர்ச்சியாக இந்த முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து செய்து வந்தால் மட்டும்தான் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசிற்கு சாதகமான ஒரு சூழலில் உருவாகக் கூடிய வாய்ப்பு இருக்கும் என்பதால் தற்போது வரை தமிழக அரசு அதிகாரிகள் கட்சித்தகமாக செய்து வருகின்றனர்.