வாரிசு திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. அண்மையில் வெளியான படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இவ்விழாவை இரண்டு இடங்களில் நடத்த தயாரிப்பு நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகின்றது. மேலும் வாரிசு திரைப்படத்தின் இசை அமைப்பாளர் தமன் “பேன் கானா அறிவிப்பு” என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் தங்களின் கொண்டாட்டத்தை பதிவிட்டு வருகின்றார்கள்.