ஒடிசா திரைப்பட தயாரிப்பாளராக அக்சயா பரிஜா என்பவர் இருக்கிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகாரளித்துள்ளார். அதுமட்டுமின்றி அக்சயா பரிஜா இளம்பெண்ணுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் அக்சயா பரிஜா, அர்ச்சனா, ஷ்ரதாஞ்சலி ஆகிய 2 பெண்கள் ரூபாய்.3 கோடி பணம் கேட்டு மிரட்டுவதாகக் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதேபோன்று அர்ச்சனா மீது மற்றொரு பெண் புகாரளித்துள்ளார்.
அவற்றில், தன் அந்தரங்க படங்களை காட்டி மிரட்டுவதாக தெரிக்கப்பட்டிருந்தது. அதன்பின் காவல்துறையினர் அர்ச்சனா பற்றி விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, நடுத்தர குடும்பத்தினைச் சார்ந்த அர்ச்சனா சொகுசு வாழ்க்கைகாக, அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், தயாரிப்பாளர்கள் என பிரபலமானவர்களைக் குறி வைத்து அவர்களுடன் நெருங்கி பழகிவந்துள்ளார். அத்துடன் அவர்களுடன் தனியாக அறையிலிருந்த போது அதனை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இந்த வீடியோக்களை காட்டி அவர்களிடம் பணம் பறித்துள்ளார்.
இதற்கு உடந்தையாக அவரது கணவர் ஜகபந்து சந்து இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அர்ச்சனாவை கைது செய்ததோடு, புவனேஸ்வரிலுள்ள அவரது வீட்டிலிருந்து 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப் மற்றும் பென்டிரைவ் போன்றவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை ஆய்வு மேற்கொண்டபோது பல்வேறு முக்கிய பிரபலங்களின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சிக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பிஜூ ஜனாதா தள கட்சித்தலைவர்கள் மற்றும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த 20-க்கும் அதிகமானவர்கள் அர்ச்சனாவின் வலையில் சிக்கியது தெரியவந்துள்ளது.