அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
1973 ஆம் வருடம் அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் அரசு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல 1992 ஆம் வருடம் நடைபெற்ற வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கலைத்துக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது பல்வேறு மாகாணங்களில் சட்ட வடிவில் இருக்கிறது இந்த சூழலில் 15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடைவிதித்து மெசேஜ் செவி மாகாண அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமையும் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதன் மூலமாக 50 வருடங்களாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை ஆனது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கருக்கலைப்புரிமை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீர்ப்பு பற்றி பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருக்கலைப்பு சட்டம் தொடர்பான இந்த தீர்ப்பு கோர்ட் மற்றும் நாட்டிற்கு சோகமான நாள். உரிமையை சுப்ரீம் கோர்ட் பறித்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களில் 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை அமல்படுத்தி இருப்பதாகவும் 25க்கும் மேற்பட்ட மாகாணங்களுக்குள் கருக்கலைப்பு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை அமல்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது.
இந்த தேர்தல் முடிவு அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளுக்கு இடையேயான சமபங்கு ஆற்றலை தீர்மானிக்க கூடியதாகும். அதனால் தற்போது அமெரிக்காவில் பெண்கள் மீண்டும் கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலின் போது பொதுமக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக வாக்குகளை அளிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் இந்த போராட்டம் ஆண்களுக்கு எதிரானது அல்ல எனவும் பெண்களின் உரிமை தொடர்பானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.