“உலகத்தை மீண்டும் இணைத்தல்” என்ற தலைப்பில் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
கனடா நாட்டில் மாண்ட்ரியல் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரிலுள்ள சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு அதன் தலைமையகத்தில் 41-வது நிர்வாகக் குழு கூட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 2050-ம் ஆண்டுக்குள் சர்வதேச விமானங்கள் நிகர பூஜ்ய கார்பன் வெளியீடு என்ற இலக்கை எட்டுவதற்கான வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதனை அடுத்து 184 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள 57 நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விமான பாதுகாப்பு, வான் வழி செலுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்பம் தொடர்பான 56 தலைப்புகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் “உலகத்தை மீண்டும் இணைத்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிர்வாகக் குழு கூட்டமானது, கொரோனா நோய் தொற்று பரவலுக்குப் பிறகு முதல் முறையாக நேரில் நடைபெற்ற உலகளாவிய சிவில் விமான போக்குவரத்துத் துறையின் மிகப்பெரிய கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.