Categories
உலக செய்திகள்

இதற்கு என்ன காரணம்?…. பிரபல நாட்டில் “மர்மமான முறையில் உயிரிழந்த கங்காரு இனம்”…. விசாரணையில் அதிகாரிகள்….!!!!

பிரபல நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த விலங்குகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிரபல நாடான ஆஸ்திரேலியாவில்  உயிரியல் பூங்கா ஒன்று  அமைந்துள்ளது . இந்த பூங்காவில் ஏராளமான விலங்குகள் வசித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென 8 கங்காருகள், 2  பாறை வலாபிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் இது குறித்து அந்த  பூங்கா செய்தி தொடர்பாளர் கூறியதாவது. இவைகள்   எப்படி  இறந்தது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் தாவர நச்சுத்தன்மை பெரும்பாலும் காரணமாக இருக்கலாம். ஆனால் கால்நடை மருத்துவர் குழு இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று நம்புகிறது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் முடிவில் என்ன காரணம் என தெரியும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |