Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் உணவுக்கு கூட கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி பெரடனியா பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த வகையில் நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் அதாவது 96 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு இருக்கின்றனர். கடந்த 2019 ஆம் வருடத்தில் வெறும் சுமார் 30 லட்சம் பேர் மட்டுமே வறுமை கோட்டிற்கு கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது அது சுமார் ஒரு கோடியை எட்டியுள்ளது ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 42 சதவீதத்தினர் அதாவது 2.1 கோடி பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள் நீடித்து வருகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த அவல நிலை ஏற்பட்டிருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர் வசந்தா அதுகோரலா கவலை தெரிவித்து இருக்கிறார். இதற்கிடையே இந்த மோசமான சூழ்நிலை காரணமாக மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 500 மருத்துவர்கள் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்கள்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த நிலை தொடரும் என சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரிதா அலுக்தே எச்சரிக்கை விடுத்துள்ளார். 60 வயதில் அனைத்து அரசு ஊழியர்களும் ஓய்வு அளிக்கும் அரசின் முடிவு நிலைமையை மோசமாகும் என தெரிவித்துள்ள அவர் இந்த நடவடிக்கையை அரசு தொடர்ந்தால் பொது சுகாதார அமைப்பு சுமார் 300 நிபுணர்கள் உட்பட சுமார் 800 மருத்துவர்கள் இழக்க நேரிடும் எனக் கூறியுள்ளார். மேலும் சில அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

Categories

Tech |