அமெரிக்காவில் நீண்ட காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்துக்கும் இடையே முக்கிய தரகராக அமைதி பேச்சுவார்த்தையில் பங்காற்றி வருகின்றது.
அமெரிக்காவில் நீண்ட காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்துக்கும் இடையே முக்கிய தரகராக அமைதி பேச்சுவார்த்தையில் பங்காற்றி வருகின்றது. இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த தீவிரமாக மத்தியஸ்தராக இருந்து செயல்பட்ட அமெரிக்கா, இப்போது அதிலிருந்து பின்வாங்கியுள்ளது. உக்ரைன் போர், சீனாவுடனான உறவுகள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் போன்ற பல்வேறு பிற உலகளாவிய பிரச்சினைகளை நோக்கி அமெரிக்கா தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.
இந்நிலையில், கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற பிராந்திய உச்சி மாநாட்டில் பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் ரஷ்ய அதிபர் புதினுடன் நெருக்கமாக கலந்துரையாடினார். இது குறித்து அதிபர் மகமூத் அப்பாஸ் கூறியதாவது, “நாங்கள் (பாலஸ்தீனியர்கள்) அமெரிக்கா நாட்டை நம்பவில்லை. எந்த நிபந்தனையின் கீழும் அமெரிக்காவை நாங்கள் ஏற்க மாட்டோம். மத்திய கிழக்குப் பிரச்சனையைத் தீர்ப்பதில் அமெரிக்கா, ஒற்றைக் கட்சியாக இருப்பதை நாங்கள் ஏற்கவில்லை.
ரஷ்யா உறுப்பினராக உள்ள “குவார்டெட்” குழுவின் ஒரு பகுதியாக அமெரிக்க இணைந்தால் மட்டுமே, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்குமிடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை நாங்கள் கருதுவோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளர். அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் நிர்வாகம், பாலஸ்தீனியத்துக்கு வழங்கி வந்த நிதியை குறைத்தது. மேலும், இஸ்ரேலுக்கு சாதகமான கொள்கைகளை பின்பற்றியது. அத்துடன், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை சர்ச்சைக்குரிய ஜெருசலேமுக்கு மாற்றியது.
இதனை தொடர்ந்து, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பாலஸ்தீனியத்துக்கான நிதியை உயர்த்தினார். ஆனால் ஜெருசலேமிலிருந்து தூதரகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளை மறுபடியும் தொடங்க முயற்சிக்கவில்லை, மாறாக பாலஸ்தீனிய பொருளாதாரத்தை உயர்த்துவது போன்ற எளிமையான இலக்குகளில் கவனம் செலுத்தினார். இந்நிலையில், அப்பாஸின் கருத்துக்கள் அமெரிக்கா மீதான அவரது விரக்தியை பிரதிபலித்தது.
இது குறித்து பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் பேசிய போது உக்ரைன் போரை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இவருடைய வயது 87 ஆகிறது. மேலும் அப்பாஸ் தலைமையிலான பலவீனமான பாலஸ்தீனிய அரசு, உள்நாட்டில் செல்வாக்கை இழந்து வருகின்றது, பலவீனமான, ஊழல் மற்றும் சர்வாதிகார அரசாக அங்குள்ள பொதுமக்களால் பார்க்கப்படுகின்றது.