இந்தியா நீதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என சர்வதேச நிதியம் கூறியுள்ளது.
சர்வதேச நிதியத்தின் நிதி விவகார துறையின் துணை இயக்குனர் புவலோ மவுரோ செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது. நமது நாட்டின் கடன் விகிதம் இந்த ஆண்டு இறுதிக்குள் 84 சதவீதமாக இருக்கும். இது வேறு வளர்ந்து வரும் நாடுகளை விட அதிகம். இதனை தாங்கிக் கொள்ளக் முடியும். மேலும் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக உள்ளது.
இதுவும் வளரும் நாடுகளை விட சற்று அதிகம். எனவே நீதி பற்றாக்குறையை குறைப்பது மிகவும் அவசியம். ஆனால் ரொக்க பரிமாற்றம் மற்ற நாடுகளை விடை சிறப்பாக உள்ளது. ஏனென்றால் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை இந்தியா குறைத்துள்ளது. இதன் மூலம் கார் வைத்திருப்பவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். எனவே வரிக்குறைப்பை திரும்ப பெற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.