பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று ஜி.பி.முத்துவிற்கும், தனலட்சுமிக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று பாத்திரம் கழுவும் அணியின் கேப்டன் ஜனனி தனது அணியிலிருந்து ஜி.பி. முத்துவிற்கு பதில் ஆயீஷாவை ஸ்வாப் செய்துகொண்டார். இதன் காரணமாக வீட்டிற்கு வெளியே இருக்கும் கார்டன் ஏரியாவில் நேற்றிரவு முழுதும் ஜி.பி.முத்து உறங்கி வந்தார்.
இந்த நிலையில் இன்று வெளிவந்துள்ள முதல் ப்ரோமோவில் தனலட்சுமிக்கு பதில் ஜி.பி. முத்துவை ஸ்வாப் செய்துகொண்டுள்ளார். இதன் வாயிலாக தனலட்சுமி வீட்டிற்கு வெளியே சென்று உறங்கும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தனலட்சுமி வீட்டுக்கு வெளியே தனியாக உட்கார்ந்து அழுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.