Categories
உலக செய்திகள்

2020 ல் இந்தியாவில் 5.6 கோடி பேர் வறுமை நிலை… உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!!!

இந்தியாவில் 2020 ஆம் வருடம் 5.6 கோடி பேர் வருமை நிலைக்கு ஆளாகி உள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பினால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். தொழிலக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் உலக பொருளாதார மந்த நிலையை சந்தித்துள்ளது மேலும் கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2020 வருடம் மட்டும் உலக அளவில் 7.1 கோடி பேர் மிக  வறுமை  நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் இதில் 79% பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆகும். அதிலும் குறிப்பாக கொரோனா பாதிப்பினால்  மட்டும் இந்தியாவில் 5.6 கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

சர்வதேச தீவிர வறுமை விகிதம் கடந்த 2019ல் 8.4 சதவீதமாக காணப்பட்டிருந்த நிலையில் 2020இல் அது 9.3% அதிகரித்து இருக்கிறது. அதன்படி 2020இல் 7.1 கோடி பேர் தீவிர வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டதை அடுத்து உலக அளவில் உள்ள மொத்த ஏழை மக்களின் எண்ணிக்கை 70 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் சர்வதேச அளவில் வறுமையின் அதிகரிப்பில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பங்கே மிகப்பெரிய அளவில் உள்ளது. இருப்பினும் சீனா விஷயத்தில் இந்த கருத்து எதிர்மறையாகவே உள்ளது.

ஏனென்றால் சீனா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் கடந்த 2020 ஆம் வருடம் ஏற்பட்ட வறுமையின் அதிகரிப்பில் அந்த நாட்டின் பங்கு சிறிய அளவிற்கே உள்ளது. இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது அங்கு வறுமையின் பிடியில் சிக்கியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். வறுமையை அளவிட உதவும் நுகர்வோர் பிரமிடுகள் குடும்ப ஆய்வு குறித்து அதிகாரப்பூர்வ தரவுகளை கடந்த 2011 ஆம் வருடத்தில் இருந்து இந்திய அரசு வெளியிடவில்லை. மேலும் உலகளாவிய மற்றும் பிராந்திய வறுமை மதிப்பீடுகளில் முக்கியமான இடைவெளியை நிரப்ப சிபிஹெச்எஸ் தரவு மிக உதவியாக இருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்சீன வளர்ச்சியில் மந்த நிலை உணவு மற்றும் எரிசக்தி விலை உயர்வு போன்றவை உலக வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள காரணத்தால் 2022-ல் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மேலும் தடைப்படும் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |