Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உயிரை எடுப்பது காதலா…? “2 முறை” கொல்ல முயன்றேன்…. பகீர் வாக்குமூலம்…!!!

சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி சத்யா(20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதி சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். . ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார்.

இதையடுத்து கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சதீஷ் அளித்த வாக்குமூலத்தில், சத்யா தன்னை பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், திடீரென காதலை முறித்துக்கொண்டதால் ஆத்திரத்தில் அவரை கொல்ல முடிவு செய்து, கொலை செய்ய இரு முறை முயற்சித்ததாகவும், பின் நேற்று ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |